மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்

மருத்துவ படிப்புகளுக்கான 2 - ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்; மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.
மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தம்
x
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கடந்த 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை, சென்னையில் முதல்கட்ட மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 2,447 அரசு இடங்கள் உட்பட தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்.இடங்களும், குறைந்த எண்ணிக்கையில் பி.டி.எஸ்., இடங்களும் இதில் நிரம்பின.இந்நிலையில் தமிழ்வழியில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகள் தவறாக இருந்ததால் 196 மதிப்பெண் வழங்க உத்தரவிட்டும், புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 10 ம் தேதி உத்தரவிட்டது.இதனையடுத்து தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 16,17,18 தேதிகளில் நடக்க இருந்ததை திடீரென ரத்து செய்து, மருத்துவக்கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன்  அறிவித்துள்ளார். 

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மேற்கோள் காட்டி, இரண்டாம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்வதாகவும், புதிய கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட மருத்துவப்படிப்பு கலந்தாய்வு மூலம் சேர்க்கை உத்தரவு பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவக்கல்வி இயக்குநகரத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், கலக்கம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்