நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக, தினகரன் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன், அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தங்க தமிழ்செல்வன் அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்
x
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனை விமர்சித்ததாக தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ் செல்வனுக்கு எதிராக  ஸ்ரீமதி என்ற வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞரின் ஒப்புதல் தேவை என்பதால், மனு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனுவை ஆராய்ந்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக தங்கத்தமிழ் செல்வனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி நேற்று அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆஜரான தங்கத் தமிழ் செல்வன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். அவருடன் ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழ் மணி, மோகன் ஆகியோரும் மன்னிப்பு கோரினர்.

மன்னிப்பை ஏற்றுக் கொள்வதற்கு தமக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், நோட்டீசுக்கு பதிலளிக்க அவகாசம் கோரியதை அடுத்து, ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன்,18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தாம் நம்புவதாக கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்