பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை 

சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து 7 மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான். பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும். டி.ஜி.பி.க்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்