சத்துமாவு நிறுவனத்தில் 4 ஆவது நாளாக நீடிக்கிறது, சோதனை - ஆழ்குழாய் கிணறு குழாயில் பதுக்கிய 100 பென் டிரைவ்கள் கண்டுபிடிப்பு.

சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு விநியோகம் செய்த தனியார் நிறுவனத்தின் காசாளர், கார்த்திகேயன் வீட்டில் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துமாவு நிறுவனத்தில் 4 ஆவது நாளாக நீடிக்கிறது, சோதனை - ஆழ்குழாய் கிணறு குழாயில் பதுக்கிய 100 பென் டிரைவ்கள் கண்டுபிடிப்பு.
x
சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு  விநியோகம தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் விட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின் போது கார்த்திகேயன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் கார்த்திகேயன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், ஆழ்துளை கிணற்றின் குழாயில் பதுக்கி வைத்திருந்த  100க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

குமாரசாமியிடம் ரகசிய இடத்தில் விசாரணை 


சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு  விநியோகித்த தனியார் நிறுவனங்களின் தமிழகம் மற்றும் கர்நாடகா அலுவலகங்களில் நடந்த  சோதனையில் இதுவரை கணக்கில் வராத 17 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில்  அந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி திருச்செங்கோட்டிற்கு அழைத்து வந்து , ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வருமானவரி சோதனை - ஸ்டாலின் கருத்து

அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரது வீடுகளில் நடந்த சோதனைகளைப் போல், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை ஒன்றும் தெரியாமல் முடிந்து விடக்கூடாது என்று,  திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்