சுகாதாரமற்ற சூழலில் வளர்க்கப்படும் மீன்கள் அழிப்பு

நாய்க்கறியை உணவாக கொடுத்து மீன்களை வளர்ப்பதாக புகார்
சுகாதாரமற்ற சூழலில் வளர்க்கப்படும் மீன்கள் அழிப்பு
x
அசைவ உணவுப் பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் உணவுகளில் பிரதானமாக இருப்பது மீன் வகைகள். 

ஈரோடு மாவட்டத்தில் வைராபாளையம்,  சுண்ணாம்பு ஓடை,  காலிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மீன் உற்பத்திக்காக ஏராளமான பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த பண்ணைகளில் மீசை கெளுத்தி  வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட இந்த வகை மீன்களை உரிய அனுமதி பெறாமல் வளர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சுகாதாரமற்ற முறையில் செயற்கை குளங்களை உருவாக்கி இந்த மீன்களை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

இந்த மீன்களுக்கு உணவாக இறந்து போன நாய்கள் மற்றும் கோழிகளின் கழிவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் சுற்றுப்புற பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி உண்ணும் போது பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக தொடர்ச்சியாக புகார் எழுந்ததால் வருவாய் வட்டாட்சியர் அமுதா மற்றும் மீன்வளத்துறை அதிகாரி நல்லசாமி தலைமையிலான குழு, மீன் பண்ணைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது. சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரசாயன பவுடர் தூவி நிலத்தில் புதைத்து அழித்தனர். 

இதுபோல் அவ்வப்போது சோதனைகள் நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்