தலையில் தீ வைத்து முடி திருத்தம் - இளைஞர்களை ஈர்க்கும் "நெருப்பு கட்டிங்"
தலையில் தீ வைத்து முடி திருத்தம் - இளைஞர்களை ஈர்க்கும் "நெருப்பு கட்டிங்"
திருப்பூர் வேலம்பாளையம் ரிங்ரோடு பகுதியில் முடிவெட்டும் கடை நடத்திவருபவர் தீனா... பெங்களூருவில் சிகை அலங்கார பயிற்சி மேற்கொண்ட தீனா, திருப்பூரில் தனது வித்தைகளை செயல்படுத்தி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். தலை முடியில் தீ வைத்து பற்றி எரிய, இளைஞர்களும் சற்றும் அச்சமின்றி சர்வ சாதாரணமாக முடி வெட்டிகொள்கின்றனர். இவ்வாறு தீ வைத்து முடி வெட்டும் முறை குறிப்பாக சுருள் முடி கொண்ட இளைஞர்களுக்கு நல்ல பலனை தருகிறது.இந்த முறையில் முடி வெட்டிய பின்னர், பொடுகு பிரச்சினை அறவே இல்லை என கூறும் இளைஞர்கள், முடி மிருதுவாகவும் நீளமாகவும் வளர்வதாக தெரிவிக்கின்றனர்.
Next Story

