நிலவிற்பனையில் ரூ.370 கோடி முறைகேடு - ஸ்டாலின்

வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம், தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
நிலவிற்பனையில் ரூ.370 கோடி முறைகேடு - ஸ்டாலின்
x
வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலம், தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலம், 33.46 கோடி ரூபாய் என்ற குறைந்த விலைக்கு, தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின்  குற்றம் சாட்டி உள்ளார். அதனால் அரசுக்கு சுமார் 370 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அறக்கட்டளைக்கு என்று கூறி நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய அறக்கட்டளை நிர்வாகம், தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்