பெண்களுக்கு எதிரான குற்றம் - முதலிடத்தில் நெல்லை

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக நெல்லை உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றம் - முதலிடத்தில் நெல்லை
x
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2016ஆம் ஆண்டை விட, 2017-ல் குறைந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

2016-ல் 11 ஆயிரத்து 625 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2017-ல் 10 ஆயிரத்து 677 வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு 7 பெருநகரங்கள் பட்டியலில் சென்னையில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016-ல்  710 வழக்குகளும், 2017-ல் 663 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மேற்கு மண்டலத்தில், அதிகபட்சமாக சேலம்,  கோவை மாவட்டங்களில் 2016-ம் ஆண்டில் தலா, 231 வழக்குகளும், 2017ல் சேலத்தில் 242 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 2016-ல் 826 வழக்குகளும், 2017-ல் 831 வழக்குகளும்  பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில், 2016ல் 201 வழக்குகளும், 2017-ல் 268 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 2016-ல் ஆயிரத்து 97 வழக்குகளும், 2017-ல் ஆயிரத்து 138 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்