கட்டாய ஹெல்மெட் - நடவடிக்கை என்ன?

ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் போடாதவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய ஹெல்மெட் - நடவடிக்கை என்ன?
x
* ஹெல்மெட், சீட் பெல்ட் அணியும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

* வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

* அண்டை மாநிலமான கேரளாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக 
பின்பற்றப்படுவதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள்.

* இந்த விதிகளை காவல் துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். 

* கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணியும் சட்டத்தை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசு, காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்