"28 பதக்கங்களை வென்று அசத்தல்" காவல் ஆணையர் வாழ்த்து

x

உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள், கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை சார்பாக பங்கேற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், 16 தங்கம், 8 வெள்ளி உட்பட 28 பதக்கங்களை வென்று அசத்தினர். இந்தநிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பதக்கம் வென்றவர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்