வேர்ல்ட் கப் தோல்வி எதிரொலி... பாக். அணியில் அதிரடி மாற்றம் | Pakistan

x

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மார்கல் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், வேகப்பந்து வீச்சுக்கு புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல்லும், சுழற்பந்து வீச்சுக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் சயீத் அஜ்மலும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறாததால் பல்வேறு அணி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்