"இது தான் இன்னைக்கு எங்க பிளான்.." - ரோஹித் சொன்ன ரகசியம்

x

முதல் 2 போட்டிகளைப்போல இன்றையப் போட்டியையும் இயல்பாக எதிர்கொள்வோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறி உள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான ஒன்றுதான் என்றும், அதே சமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் முந்தைய சாதனைகளைப் பற்றி பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை என்றும், இன்றையப் போட்டிக்கு மட்டுமே கவனம் செலுத்தி இருப்பதாகவும் ரோகித் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்