பாகிஸ்தானின் அபார வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு ஒயிட்வாஷ்

x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கொழும்பு நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபர் அசாமும், ரிஸ்வானும் அரைசதம் அடித்தனர். பின்னர் 269 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான், 49வது ஓவரில் 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒயிட்-வாஷ் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்