உலகக்கோப்பை தொடர் - பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான வரவேற்பு 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

x

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தடைந்தது. கராச்சியில் இருந்து துபாய் வழியாக விமானம் மூலம் பாகிஸ்தான் அணியினர் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லும் வரை, வழியில் நின்ற இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியர்களின் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஹைதராபாத்தில் உள்ள ரசிகர்களால் அன்பும், ஆதரவும் நிரம்பி வழிவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்