IND Vs PAK - களம் இறங்குமா ரோஹித்தின் அஸ்திரம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதும் போட்டியில் தொடக்க வீரர் சுப்மன் கில் அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில், கடந்த 2 போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது டெங்கு பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள சுப்மன் கில், அகமதாபாத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், நாளையப் போட்டிக்கான இந்திய அணியில், சுப்மன் கில் 99 சதவீதம் தேர்வு செய்யப்படுவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதனால் இஷான் கிஷானுக்கு பதிலாக கில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.
Next Story