பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்..2ம் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

x

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஷாங் உடன் பி.வி.சிந்து மோதினார். இதில் முதல் செட்டை 13க்கு 21 என்ற கணக்கில் சிந்து தவறவிட்டார். எனினும், அடுத்தடுத்த செட்களை 21க்கு 10, 21க்கு 14 என்ற கணக்கில் வென்று காலிறுதியில் சிந்து கால்பதித்தார். இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சென்-ஐ சிந்து எதிர்கொள்ளவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்