"இன்னும் 10 நாட்களில்..." தோனி குறித்து வெளியான முக்கிய அப்டேட் | MSD

x

இன்னும் 10 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வலைப்பயிற்சியை தொடங்க உள்ளதாக அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி, ஐபிஎல் தொடருக்கு முன்பாக முழு உடற்தகுதியை எட்டுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது ஜிம்மில் தீவிரப் பயிற்சியில் தோனி ஈடுபட்டு இருப்பதாகவும், காயத்தில் இருந்து தோனி குணமடைந்துவிட்டதாகவும் காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்