ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு - லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறும் டி20 கிரிக்கெட்

x

2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழும கூட்டத்தில் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்புக்குப் பிறகு, டி20 கிரிக்கெட், பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ராஸ் மற்றும் ஸ்குவாஸ் ஆகிய 5 புதிய விளையாட்டுகள் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கடைசியாக கடந்த 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதற்குப் பிறகு 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்