ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்... விட்டுக்கொடுக்காத தென் கொரியா - பாகிஸ்தான்

x

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தான், தென் கொரியா இடையிலான லீக் போட்டி சமனில் முடிந்தது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில், பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்துல் 18வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. 2வது பாதியின் 53வது நிமிடத்தில், தென் கொரியா வீரர் யாங் ஜிஹுன், பதில் கோல் அடித்து சமன் செய்தார். தொடர்ந்து இரு அணியினரும் கோல் அடிக்காத நிலையில், 1க்கு 1 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.


Next Story

மேலும் செய்திகள்