பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய லக்னோ... பிரகாசமாகும் பிளேஆப் வாய்ப்பு

லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.
x
பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய லக்னோ... பிரகாசமாகும் பிளேஆப் வாய்ப்பு

லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி லக்னோ அணி 6-வது வெற்றியை பதிவு செய்தது.

Next Story

மேலும் செய்திகள்