மைக்கேல் கிளார்க் - சைமண்ட்ஸ் நட்பு முறிய இது தான் காரணமா?... மனம் திறந்த சைமண்ட்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக ஜொலித்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க்கிற்கு இடையே நட்பு முறிய காரணம் என்ன? என்பது குறித்து சைமண்ட்ஸ் மனம் திறந்துள்ளார்.
x
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களாக ஜொலித்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க்கிற்கு இடையே நட்பு முறிய காரணம் என்ன? என்பது குறித்து சைமண்ட்ஸ் மனம் திறந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தலைமையில் பல போட்டிகளில் களமிறங்கிய அசத்தியவர், ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். பார்ட்னர்ஷிப்பில் இருவரும் அசத்தி வந்த நிலையில்,  கிளார்க்கின் தலைமை மீது அவ்வபோது தனது அதிருப்தியை சைமண்ட்ஸ் வெளியிட்டு வந்தது, அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் ஐபிஎல் தொடரில் அதிக ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால் தம்மீது கிளார்க் பொறாமைகொண்டதே தங்கள் நட்பு முறிய காரணம் என சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் கூட தம்மிடம் இதையே தெரிவித்ததாகவும் அவர் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்