சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் உலக செஸ் சாம்பியன்

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியில், உலக சாம்பியனும் நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.
x
சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் உலக செஸ் சாம்பியன்

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியில், உலக சாம்பியனும் நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர் பேட்டியில் பேசிய கார்ல்சன், மிகவும் குறைவான நேரத்தில் தமிழகத்தில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இது இந்தியாவில் விளையாட்டிற்கான மரியாதையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும் தானும் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்த அவர், கடைசியாக 2013ல் சென்னைக்கு வந்ததாகக் கூறி கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்