தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்த தோனி

ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா அரை சதம் அடித்தார். சென்னை தரப்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி தனது பாணியில் வழக்கம் போல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்