வீரேந்திர சேவாக் குறித்து சுனில் நரைன் திடீர் கருத்து

ஐபிஎல் போட்டிகளில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவக்கிற்கு பந்துவீசியது கடினமாக இருந்ததாக கொல்கத்தா அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் மனம் திறந்துள்ளார்.
x
ஐபிஎல் போட்டிகளில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவக்கிற்கு பந்துவீசியது கடினமாக இருந்ததாக கொல்கத்தா அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் மனம் திறந்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நரைனிடம், தங்களது பந்துவீச்சை யார் சிறப்பாக எதிர்கொண்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நரைன், வீரேந்திர சேவக் தன்னுடையை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார் என்றும், சேவக்கிற்கு பந்துவீசியதை எப்போதும் கடினமாக உணர்ந்ததாகவும் கூறினார். எந்த சூழலிலும், தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ஆடியவர் சேவக் என்றும் சுனில் நரைன் புகழ்ந்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்