கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு...விளையாட சென்ற போது நேர்ந்த சோகம்!

83வது தேசிய சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தீனதயாளன் விஷ்வா மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
x
கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு...விளையாட சென்ற போது நேர்ந்த சோகம்!

83வது தேசிய சாம்பியன்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தீனதயாளன் விஷ்வா மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வீர‌ர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில், கார் டிரைவரும், தீனதயாளன் விஷ்வாவும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற 3 வீர‌ர்களும் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. 18 வயதான அவர், வரும் 27ஆம் தேதி ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க இருந்த‌து குறிப்பிடத்தக்கது. அவரது இறப்புக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்