"15வது மாடியில் என்னை தொங்கவிட்ட மும்பை வீரர்" - சஹால் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மும்பை அணியில் தான் விளையாடியபோது, மது போதையில் சக வீரர் ஒருவர் தன்னை பால்கனியில் தொங்கவிட்டதாக சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
மும்பை அணியில் தான் விளையாடியபோது, மது போதையில் சக வீரர் ஒருவர் தன்னை பால்கனியில் தொங்கவிட்டதாக சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள விடுதி ஒன்றின் 15வது மாடியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், உடனடியாக அங்கிருந்த சிலர் தன்னை மீட்டதால், தான் உயிர் பிழைத்தேன் என்றும் சஹால் கூறி உள்ளார். மது போதையில் தன்னை தொங்கவிட்ட வீரரின் பெயரைக் குறிப்பிடாத சஹால், இந்த சம்பவத்திற்குப் பிறகு, தான் மயங்கிவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடிவரும் சஹால், அஸ்வினிடம் கலந்துரையாடியபோது இந்த நிகழ்வைக் கூறி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்