சர்வதேச போட்டிக்கு தேர்வான நாமக்கல் மாணவி - நேரில் அழைத்து பாராட்டிய டி.எஸ்.பி

சர்வதேச ஜூனியர் பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட நாமக்கல் பள்ளி மாணவி அமிர்தா தேர்வாகி உள்ளார்.
x
சர்வதேச ஜூனியர் பீச் வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட நாமக்கல் பள்ளி மாணவி அமிர்தா தேர்வாகி உள்ளார். பிரான்ஸில் வருகிற மே மாதம் சர்வதேச ஜூனியர் பீச் வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியில் பரமத்திவேலூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி அமிர்தாவும் இடம்பிடித்து உள்ளார். இந்நிலையில், மாணவி அமிர்தாவை பரமத்திவேலூர் டி.எஸ்.பி ராஜாரணவீரன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தியும் பரிசு வழங்கியும் பாராட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்