"வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்" - இந்திய மகளிர் அணிக்கு ராகுல்காந்தி பாராட்டு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், தோல்வியை தவிர்க்க வீரர்கள் திடமான முயற்சியுடன் போராடியதாகவும், மேலும் வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் சிறந்து விளங்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்