சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : இறுதி போட்டியில் நுழைந்த பி.வி.சிந்து!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
x
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை, பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையை 18-க்கு 21, 21-க்கு15, 19-க்கு21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை பூசனனுடன் பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்