"சிஎஸ்கே - தோனியின் விலகலும், வரலாறும்"

ஐபிஎஸ் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
x
ஐபிஎஸ் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 2008 ஆண்டு தொடங்கியது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக் கொண்டார். 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தோனி மட்டுமே அணியின் கேப்டனாக இருந்தார். தோனி பங்கேற்க முடியாமல் போன ஒரு சில ஆட்டங்களில் சுரேஷ் ரெய்னா அணியை வழி நடத்தியுள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் காரணமாக 2016 மற்றும் 2017 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட முடியாமல் போனது. தடை செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் மட்டும் புனே அணியின் கேப்டனாக தோனி விளையாடினார். ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் தோனி தலைமையில் 12 தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. 204 போட்டிகளில்121 போட்டிகளில் வெற்றியும், 82 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. முக்கியமாக, தோனி தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்