ஏடிபி டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் நடால் அபாரம்

இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் முன்னணி வீரர் ரஃபேல் நடால் முன்னேறி உள்ளார்.
ஏடிபி டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் நடால் அபாரம்
x
இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயினின் முன்னணி வீரர் ரஃபேல் நடால் முன்னேறி உள்ளார்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், சக நாட்டு இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக ஆடிய நடால், 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் அதனைக் கைப்பற்றினார். அடுத்த செட்டில் நடாலுக்கு கடும் சவால் அளித்த அல்கராஸ், 6க்கு 4 என்ற கணக்கில் 2வது செட்டைக் கைப்பற்றினார். பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல்பறந்த நிலையில், 6க்கு 3 என்ற கணக்கில் அதனைக் கைப்பற்றி அரையிறுதியில் நடால் வெற்றி பெற்றார். இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடால், சாம்பியன் பட்டத்துக்காக அமெரிக்க வீரர் ஃபிரிட்ஸ் உடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்