இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அசத்தல்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று உள்ளார்.
x
இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று உள்ளார். பர்மிங்ஹம் நகரில் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சீன வீராங்கனை வாங்-ஷி-யி (wang-zhi-yi) உடன் சிந்து மோதினார். 42 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், 21க்கு 18, 21க்கு 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்