300 ஆண்டுகள் பழமையான மன்மதன் கோவில் தேர்த் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே மன்மதன் கோவில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
x
அரகண்டநல்லூர் அருகே உள்ள காரணை பெரிச்சானூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான மன்மதன் கோவில் அமைந்துள்ளது. அங்கு, மாசி மாத அமாவாசை திதியின் மூன்றாம் பிறையில் காப்பு அணிதல் நிகழ்ச்சியும், 13 மற்றும் 14ம் நாட்களில், கிராம மக்கள் ரதி, மன்மதன் வேடம் அணிந்து நடனமாடும் நிகழ்ச்சியும் நடைப்பெறும். அதன் படி, இறுதி நாளில் 27 அடி உயரம் கொண்ட மன்மதன், அலங்கரிக்கப்பட்ட கிளி வாகனத் தேரில் ஊர்வலமாக வலம் வந்தார். அப்போது, பட்டாசு மற்றும் வாணவேடிக்கை ஆகியவற்றுடன் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மன்மதனை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்