இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் : பிரிட்டன் வீரர் முர்ரே அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் : பிரிட்டன் வீரர் முர்ரே அதிர்ச்சி தோல்வி
x
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றில், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பூப்லிக்(AlexanderBublik) உடன் முர்ரே மோதினார். டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7க்கு 6 என்ற கணக்கில் பூப்லிக் வென்றார். தொடர்ந்து 2வது செட்டையும் 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றிய பூப்லிக், முர்ரேவை வீழ்த்தி 3ம் சுற்றுக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்