இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் : இத்தாலி வீரர் ஃபோஜ்னினி வெற்றி

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு, இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் ஃபாபியோ ஃபோஜ்னினி (Fabio Fognini) முன்னேறி உள்ளார்.
இந்தியன் வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடர் : இத்தாலி வீரர் ஃபோஜ்னினி வெற்றி
x
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2ம் சுற்றுக்கு, இத்தாலியைச் சேர்ந்த முன்னணி வீரர் ஃபாபியோ ஃபோஜ்னினி (Fabio Fognini) முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் அன்டுஜாருடன் ஃபோஜ்னினி மோதினார். இதில் 3க்கு 6, 6க்கு 3, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற ஃபோஜ்னினி, 2ம் சுற்றுக்கும் தகுதி பெற்றார். மேலும், இந்த வெற்றி மூலம் ஏடிபி டென்னிஸ் தொடர்களில் அதிக வெற்றி பெற்ற இத்தாலி வீரர் என்ற சாதனையை ஃபோஜ்னினி படைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்