மன்கட்’ அவுட் அநியாயம் அல்ல..!! அஸ்வினுக்கு கிடைத்த வெற்றி..??
கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது, புதிய விதிமுறைகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் எம்சிசி சமீபத்தில், "இனி கிரிக்கெட்டில் 'மன்கட்'.. ரன் அவுட் தான்" பந்தில் உமிழ்நீரை தடவுவதற்கு தடை..போன்ற பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது, புதிய விதிமுறைகளை உருவாக்குவது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் எம்சிசி சமீபத்தில், "இனி கிரிக்கெட்டில் 'மன்கட்'.. ரன் அவுட் தான்" பந்தில் உமிழ்நீரை தடவுவதற்கு தடை..போன்ற பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அஸ்வின் மீதான சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லரை - அஸ்வின் மன்கட் என்ற முறையில் அவுட்டாக்கிய நிலையில், இது விளையாட்டு முறைகளுக்கு எதிரானது எனக்கூறி அஸ்வின் மீது பல விமர்சனங்கள் குவிந்தன. தற்போது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஸ்வினுக்கு கிடைத்த ஒரு வெற்றி என நாம் கருதலாம் என தனது கருத்தினை தெரிவிக்கிறார் சுமந்த் சி. ராமன், கிரிக்கெட் வர்ணனையாளர்
Next Story