"வார்னே தன்னுடைய ஆதர்ச நாயகன்" - டேவிட் வார்னர் உருக்கம்

மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கில் நிச்சயம் கலந்துகொள்வேன் என தொடக்க வீரர் டேவிட் வார்னர் உறுதியளித்துள்ளார்.
x
மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கில் நிச்சயம் கலந்துகொள்வேன் என தொடக்க வீரர் டேவிட் வார்னர் உறுதியளித்துள்ளார்.

வார்னேவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துப் பேசிய வார்னர், ஷேன் வார்னே தன்னுடைய ஆதர்ச நாயகன் என்றும், அவரைப்போல் ஆக வேண்டுமென்ற எண்ணத்திலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததாகவும் உருக்கமாகக் கூறினார். வார்னேவின் மறைவால் ஏற்பட்ட துக்கத்திலிருந்து மீள முடியவில்லை என்ற வார்னர், வருகிற 30ம் தேதி மெல்போர்னில் நடைபெறும் வார்னேவின் இறுதிச்சடங்கில் தவறாமல் பங்கேற்பேன் எனக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்