"பரிசுத் தொகையை உக்ரைன் படைகளுக்கு வழங்கவுள்ளேன்" உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா உருக்கம்

"பரிசுத் தொகையை உக்ரைன் படைகளுக்கு வழங்கவுள்ளேன்" உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா உருக்கம்
பரிசுத் தொகையை உக்ரைன் படைகளுக்கு வழங்கவுள்ளேன் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா உருக்கம்
x
மெக்சிகோவின் மோன்ட்டெரி நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரில், ரஷ்ய வீராங்கனை போட்டபோவாவை (Potapova) உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வீராங்கனைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் போட்டபோவாவை ஸ்விட்டோலினா வென்றார். வெற்றிக்குப் பிறகு உருக்கமாக பேசிய ஸ்விட்டோலினா, இந்தத் தொடர் மூலம் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு வழங்க இருப்பதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்