IND vs WI | டி 20 கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 2 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
x
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான 2 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வரும் நிலையில் 2 ஆவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் நிலையில் ஒருநாள் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரை தக்கவைக்க முயற்சி மேற்கொள்ளும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்