ஒலிம்பிக் கமிட்டி தலைவரை சந்தித்த டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் - அறிக்கை வெளியிட்ட ஒலிம்பிக் கமிட்டி

மாயமானதாக கூறப்பட்ட சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சங்கத் தலைவர் தாமஸ் பேச்-ஐ சந்தித்துப் பேசி உள்ளார்.
ஒலிம்பிக் கமிட்டி தலைவரை சந்தித்த டென்னிஸ் வீராங்கனை  பெங் ஷுவாய் - அறிக்கை வெளியிட்ட ஒலிம்பிக் கமிட்டி
x
மாயமானதாக கூறப்பட்ட சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சங்கத் தலைவர் தாமஸ் பேச்-ஐ சந்தித்துப் பேசி உள்ளார். இந்த சந்திப்பு கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஒலிம்பிக் கமிட்டி, கொரோனா தொற்று முடிந்த பிறகு ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகத்துக்கு வந்து பெங் ஷுவாய் பேச விருப்பம் தெரிவித்ததாக கூறி உள்ளது. டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய், சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அதனால் அவரை சீனா அடைத்து வைத்ததாகவும் கூறப்பட்டது, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்