மோன்ட்பெல்லியர் ஏடிபி டென்னிஸ் தொடர் - சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் புப்ளிக்
பிரான்ஸின் மோன்ட்பெல்லியர் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸின் மோன்ட்பெல்லியர் நகரில் நடைபெற்ற ஏடிபி டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவுடன் புப்ளிக் மோதினார். இதில் முதல் செட்டை 6-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய புப்ளிக், 2வது செட்டிலும் அதிரடியாக ஆடினார். அந்த செட்டை 6-க்கு 3 என்ற கணக்கில் வென்ற புப்ளிக், முன்னணி வீரர் ஸ்வரெவிற்கு அதிர்ச்சியளித்து, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
Next Story