ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் எளிதில் வெற்றிபெற்ற முன்னணி வீரர் ரஃபேல் நடால், இறுதிப் போட்டியில் கால்பதித்தார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேற்றம்
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் எளிதில் வெற்றிபெற்ற முன்னணி வீரர் ரஃபேல் நடால், இறுதிப் போட்டியில் கால்பதித்தார்.

மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் 6ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், 7ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த பெரட்டினியும் மோதினர். இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-க்கு 3, 6-க்கு 2 என்ற கணக்கில் முதல் 2 செட்களை தனதாக்கினார். 3வது செட்டை பெரட்டினி கைப்பற்றினாலும்,  4வது செட்டில் அதிரடி காட்டிய நடால், 6-க்கு 3 என்ற கணக்கில் அதனை வென்று, பெரட்டினியை எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியால் 6வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கும் ரஃபேல் நடால் முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்