ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி தொடர் : இந்தியா-சீனா இன்று மோதல்

ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா இன்று சீனாவுடன் மோத உள்ளது.
ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி தொடர் : இந்தியா-சீனா இன்று மோதல்
x
ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி தொடரின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா இன்று சீனாவுடன் மோத உள்ளது. மஸ்கட்டில் இன்று மாலை 6 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கிறது. அரையிறுதியில் தென் கொரியாவிடம் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது. இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர், வெற்றி பெற்று ஆறுதல் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவும், ஜப்பானும் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்