ரோகித் - டிராவிட் கூட்டணி - சச்சின் கருத்து
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா - பயிற்சியாளர் டிராவிட் கூட்டணியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா - பயிற்சியாளர் டிராவிட் கூட்டணியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பேசிய அவர், வருகிற ஏப்ரல் மாதத்துடன் இந்தியா உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகப்போகிறது எனக் கூறினார். நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றதாக நெகிழ்ச்சி தெரிவித்த சச்சின், தற்போதைய இந்திய அணியும் நம்பிக்கையுடன் கோப்பையை வெல்வதற்கான பாதையில் பயணிக்கும் எனக் கூறினார்.
Next Story