ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர்:அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர்:அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்
x
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது. 

ஓமன் நாட்டில் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, லீக் போட்டியில் சிங்கப்பூர் மகளிர் அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். இந்தியா தரப்பில் குர்ஜித் கவுர் 3 கோல்களும், மோனிகா, ஜோதி ஆகியோர் தலா 2 கோல்களும் அடித்து அசத்தினர். வந்தனா கட்டாரியாவும், மரியானா குஜூரும் தலா 1 கோல் அடித்தனர். சிங்கப்பூர் தரப்பில் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், ஆட்ட நேர முடிவில் 9-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் இந்த ஆண்டு நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கும் இந்தியா தகுதி பெற்றது. இதனிடையே, நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரிய மகளிர் அணியுடன் இந்திய மகளிர் அணி மோத உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்