ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர்:2ம் நிலை வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 2ம் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 2ம் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று ஆட்டத்தில் எஸ்தோனிய வீராங்கனை கனெப்பி (Kanepi) உடன் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா மோதினார். இதில் முதல் செட்டை சபலென்காவும் 2வது செட்டை கனெப்பியும் கைப்பற்றினர். இதனால், போட்டியில் விறுவிறுப்பு கூடிய நிலையில், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3வது செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றி காலிறுதிக்கு கனெப்பி முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியடைந்த சபலென்கா, தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story