ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டி - ஆஸ்திரேலியாவின் போலன்ட் அசத்தல்

ஆஷஸ் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
x
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தை 258 ரன்களுடன் இங்கிலாந்து இன்று தொடங்கியது. சதமடித்து களத்தில் இருந்த அந்த அணி வீரர் பேர்ஸ்டோ, 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 80வது ஓவரில், 294 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.122 ரன்கள் முன்னிலையுடன், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவில், தொடக்க வீரர்கள் வார்னர் 3 ரன்களுக்கும், ஹாரிஸ் 27 ரன்களுக்கும், பெவிலியன் திரும்பினர். லபுஷேன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்