பென் ஸ்டோக்ஸுக்கு அடித்த அதிர்ஷ்டம்..கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நகைச்சுவை

பந்து வீச்சாளர்களிடம் நியாயமாக நடந்துகொள்வோம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார்.
x
பந்து வீச்சாளர்களிடம் நியாயமாக நடந்துகொள்வோம் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார். கிரிக்கெட்டில் சில சமயங்களில் ஸ்டெம்பில் பந்து பட்டும் பெய்ல்ஸ் கீழே விழாமல் போய்விடும். பெய்ல்ஸ் கீழே விழுந்தால் மட்டுமே பேட்டர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கிரீன் வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தவறவிட்ட நிலையில், ஸ்டெம்பை பந்து உரசிச் சென்றது. இருப்பினும் பெய்ல்ஸ் கீழே விழாததால், ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் தப்பித்தார். இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு டுவிட்டரில் சச்சின் பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்