உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - வரலாற்று சாதனை படைத்தார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.
x
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஹூயல்வா நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக இந்திய வீரர் லக்சய சென்- ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இதனையடுத்து அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ- வை அவர் எதிர்கொண்டார். இருவரும் தங்கத்தை எதிர்நோக்கி ஆடிய இப்போட்டியில், லோ கியானிடம் 15-க்கு 21, 20-க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கத்தை இழந்திருந்தாலும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் தன்வசப்படுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்