டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை, இந்தியா கைப்பற்றி உள்ளது.
x
மும்பையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு, இந்தியா 540 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இன்று காலை 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், இன்றும் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிக்கோலஸ் 44 ரன்களுக்கும், ரவீந்திரா 18 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்கள் வந்தவேகத்தில் நடையைக் கட்டியதால், 2வது இன்னிங்சில் 167 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம், 372 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா, 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாகவும், இந்த தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்